காணி நிர்வாகம்
அரசினால் நிறைவேற்றப்பட வேண்டிய கருமங்களில் மிக முக்கிய இடத்தினை காணி கருமங்கள் வகிக்கின்றன. கிராம மட்டத்தில் கிராம உத்தியோகஸ்தர், உத்தியோகஸ்தருடன் தொடர்புபட்டு பிரதேச செயலாளரினால் இந்த பிரிவின் உருதியான முறையொன்றின் அடிப்படையில் சட்டரீதியாக காணி கடமைகள் மேற்கொள்ளப்படும். காணி கருமங்கள் மிகுந்த கவனத்துடன் செய்யப்படவேண்டியதுடன் குறித்த ஊழியர்கள் அது தொடர்பாக கடினமான நடைமுறைகளை மேற்கொள்ளுவதற்கான அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். பரிசீலனைகளை மேற்கொள்ளக்கூடிய பல்வேறான காணி கட்டளைசட்டங்கள் காணி கரும சட்டத்திட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படும்.
காணி கருமங்கள் தொடர்பாக உபயோகப்படுத்தப்படும் பிரதான கட்டளைசட்டங்கள்:-
- 1935 இலக்கம்19 கொண்ட காணி அபிவிருத்தி கட்டளை சட்டம் ( 1969/16,1981/27,1993/22,1995/09,1996/20 மறுசீரமைக்கப்பட்டது )
- 1947 இலக்கம் 08 கொண்ட அரச காணி கட்டளைசட்டம்
- 1950 இலக்கம் 09 கொண்ட அரச காணி எடுத்தல் சட்டம் ( 1954/39.1955/22,1961/60,1964/05,1964/28 இனால் மறுசீரடைக்கப்பட்டது)
- 1972 இலக்கம் 01 கொண்ட காணி மறுசீரமைப்பு சட்டம் ( 1975/35 இனால் மறுசீரமைக்கப்பட்டது )
- இலக்கம் 07 கொண்ட அரச காணி ( கைவசம் உள்ளதை மீளப்பெற்றுக்கொள்ளல்) சட்டம். ( 1981/58.1983/29,1987/50,1997/29 இனால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.)
- 1979 இலக்கம் 43 கொண்ட காணி வழங்கள் ( விஷேட விதிமுறைகள்) சட்டம்
காணி பிரச்சினைகளை தீர்தல் கட்டளை சட்டம்
இந்த பிரிவின் மூலம் கீழ் காணப்படும் கருமங்கள் மேற்கொள்ளப்படும்
காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் காணி ஒதுக்கு மேற்கொள்ளப்படும்
- கொடுத்தல் விஷேட விதிமுறை சட்டத்தின் கீழ் காணி ஒதுக்கு செய்தல்
- மானிய ஒப்பனை பெற்றுக்கொடுத்தல்
- மத்திய வகுப்பு மானிய ஒப்பனை பெற்றுக்கொடுத்தல்
- காணி வௌியிடுதல் கட்டளை சட்டத்தின் கீழ் விடுப்பு மானிய ஒப்பனை வழங்குதல்
- நீண்ட கால வரி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்தல்
- அரச காணி கட்டளை சட்டத்தின் கீழ் மானிய ஒப்பனை பெற்றுக்கொடுத்தல்
- அரச காணி கட்டளைசட்டத்தின் கீழ் விஷேட மானிய ஒப்பனை வழங்குதல்
- அரச காணி கட்டளை சட்டத்தின் கீழ் காணிக்கை ஒப்பனை பெற்றுக்கொடுத்தல்
- அரச காணி கட்டளை சட்டத்தின் கீழ் ஒதுக்கு கட்டளையை பிரப்பித்தல்
- அரச காணி கட்டளை சட்டத்தின் கீழ் காணியை விடுவித்தல்
- காணி வருமானம் சேர்த்தல் மற்றும் காணக்கிடுதல்
- நடமாடும் சேவைகள்
காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மானிய ஒப்பனை காணி ஒன்றை உரிமை மாற்றம் செய்தல்
- காணி உரிமையாளரின் விண்ணப்பப்படிவம்
- மானிய ஒப்பனையின் மூலப்பிரதி மற்றும் புகைப்பட பிரதி
- மாத காலத்திற்குள் பெற்றுக்கொண்ட பத்திரு அறிக்கை
- மானிய ஒப்பனை உரிமையாளரின் துணைவரது மற்றும் 18 வயதிற்கு அதிகமான பிள்ளைகளின் விருப்பத்தினை வழங்கிய அறிக்கை
- காணி உரிமை மாற்றத்தினால் மானிய ஒப்பனைக்காரர் அல்லது குடும்பம் நிலையற்ற நிலைக்கு உள்ளாகமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகஸ்தர் சான்றிதழ்
- மானிய ஒப்பனைக்காரரது உரிமையாகவுள்ள தற்போதுள்ள வேறு காணி ஒன்றின் பத்திரு அறிக்கை
- உரிமை மாற்றுபவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் இரத்த உறவினை உருதி செய்யக்கூடியதான பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்கள்
காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மானிய காணி ஒன்றின் பின் உருத்தினை பெயரிடுதல்
- மானிய காணி உரிமையாளரின் விண்ணப்பப்படிவம்
- மானிய காணி ஒப்பனையின் மூலப்பிரதி மற்றும் புகைப்பட பிரதி
- மாதங்களிற்குள் பெற்றுக்கொண்ட பத்திரு அறிக்கை
- பின் உருத்தாளரின் பிறப்பு சான்றிதழ்
காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மானிய ஒப்பனைக் காணி ஒன்றினை முதல் உரிமை மாற்றம் செய்தல்
- முதல் உரிமை கோருபவரின் விண்ணப்பப்படிவம்
- மானிய ஒப்பனையின் மூலப்பிரதி மற்றும் புகைப்படப் பிரதி
- மாத காலங்களிற்குள் பெற்றுக்கொண்ட பத்திரு அறிக்கை
- மானிய காணி உரிமையாளரின் மரண சான்றிதழ்
- முதல் உரிமைக் கோருபவரின் பிறப்பு சான்றிதழ்
- முதல் உரிமை கோருபவர் வரிசு ஒருவராயின் மானிய ஒப்பனை உரிமையாளரின் துணைவரது மரண சான்றிதழ் / முதல் உரிமை கோருபவர் துணைவராயின் மானிய உரிமையாளரின் திருமண சான்றிதழ்
காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மானிய ஒப்பனை காணி ஒன்றின் வாழ்நாள் அனுபவித்தலை பெற்றுக்கொள்ளுதல்
- வாழ்நாள் அனுபவித்தலை கோருபவரின் விண்ணப்பப்படிவம்
- மானிய ஒப்பனையின் மூலப்பிரதி மற்றும் புகைப்படப்பிரதி
- மாக காலங்களிற்குள் பெற்றுக்கொண்ட பத்திரு அறிக்கை
- மானிய ஒப்பனை உரிமையாளரின் மரண சான்றிதழ்
- வாழ்நாள் அனுபவிப்பினை கோருபவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் திருமண சான்றிதழ்
காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மானிய ஒப்பனை காணி ஒன்றினை பிணையாக வைத்தல்
- மானிய ஒப்பனையாளரின் கோரிக்கை கடிதம்
- மானிய ஒப்பனையின் மூலப்பிரதி மற்றும் புகைப்படப்பிரதி
- மாத காலங்களிற்குள் பெற்றுக்கொண்ட பத்திரு அறிக்ைக
- பிணையாக வைப்பதற்கு எதிர்ப்பார்க்கும் நிறுவனத்தின் கடிதம் ஒன்று (இலங்கை மத்திய வங்கி அதிபரினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிறுவனமொன்றில்)
நீண்ட கால வரி - செயற்பாட்டு நடைமுறை
நீண்ட கால வரி கொடுத்தல் செயற்பாடு
01.பரவலான காணி கச்சேரி மூலம் நீண்ட கால வரி அடிப்படையில் ஒப்பனை பெற்றுக்கொடுத்தலுக்காக விதந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரிகளின் பெயர்பட்டியலுக்கு அமைய விதந்துரைக்காக மாகாண காணி ஆணையாளர் அனுப்புவதற்காக குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்ளல்.
விண்ணப்பதாரியின் கோரிக்கை கடிதம்
தர அறிக்கை (இணைப்பு 1 வடிவத்திற்கு அமைய காணி துண்டு உரித்தாகும் கிராம உத்தியோகஸ்தர் பிரிவின் கிராம உத்தியோகஸ்தரினால் 4 பிரதிகளில் பெற்றுக்கொள்ள வேண்டும்.)
துணை வரைபு (இணைப்பு 2 இல் குறிக்கப்பட்டுள்ள படிவம் மூலம் அளவை கட்டளை கோவையில் இலக்கம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் கச்சேரி அளவையாளரிற்கு அளவை கடடளை ஒன்றை அனுப்ப வேண்டும்.)
உள்ளூர் அரசாங்க நிறுவனங்களின் இணக்கப்பாடு (காணி துண்டு நகர சபை எல்லைக்குள் என்றால் நகர சபை இணக்கப்பாடும் பிரதேச சபை இல்லைக்குள் என்றால் பிரதேச சபை இணக்கப்பாடும் பெற்றுக்கொள்ள வேண்டும்.)
19 பின்னிணைப்பு (இணைப்பு 3)
17 பின்னிணைப்பு (இணைப்பு 4)
வரி செலுத்துவதை உறுதி செய்யும் சத்தியப்பிரமான கடிதம் (இணைப்பு 5)
21 (2) அறிவித்தல் (இணைப்பு 6)
- 02. மேல் காட்டப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் 3 பிரதிகளில் மாகாண காணி ஆணையாளருக்கு அனுப்புதல். இங்கு அனைத்து ஆவணங்களும் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- 03. மாகாண காணி ஆணையாளர், காணி ஆணையாளர் நாயகத்திற்கு மேற்போந்த ஆவணங்களை அனுப்பி நீண்ட கால வரி அடிப்படைக்கு பெற்றுத்தருவதற்கு அனுமதி பெற்றுக்கொண்டதன் பின் அது சம்பந்தமாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்படும்.
காணி அலுவல்கள் தொடர்பாக நீங்கள் சந்திக்க வேண்டிய அரச உத்தியோகஸ்தர்கள்
பிரதேச செயலாளர்,
உதவி பிரதேச செயலாளர்,
மீள்குடியேற்ற உத்தியோகஸ்தர்,
கிராம உத்தியோகஸ்தர்















