உறுதிப்பத்திரம் வழங்கல் / உறுதிப்படுத்தல்
- காணி அபிவிருத்தி உறுதிப்பத்திரம்
- நீண்டகால வரி அறவிடும் இடங்களுக்கான உறுதிப்பத்திரம்
- விகாரைகள் ஆரம்பிப்பதற்கான உறுதிப்பத்திரம்
- இடங்களுக்கான வருடாந்த அனுமதிப் பத்திரம்
- மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரம்
- மரம் ஏற்றிச் செல்வதற்கான அநுமதிப்பத்திரம்
- கட்டிடப் பொருட்கள் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம்
- மிருகங்கள் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம்
- ஊர்வலங்களில் யானைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரம்
- மணல்அகழ்வுக்கான அனுமதிப் பத்திரம்
- கருங்கல் உடைப்பதற்கான அனுமதிப் பத்திரம்
- வெடிபொருள் கொடுப்பதற்கான அனுமதிப் பத்திரம்
- துப்பாக்கி அனுமதிப் பத்திரம்
- கள் விற்பனை அனுமதிப் பத்திரம்
- கள் வரி அனுமதிப் பத்திரம்
- வாகன ஆதாயம் அனுமதிப் பத்திரம்
- வாகனஞ் செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரம்
- வெளிநாட்டுப் பயண கடவுச்சீட்டு
- ஓய்வூதிய புகைவண்டி அனுமதிப் பத்திரம்
- ஊழியர்களுக்கான புகைவண்டி அனுமதிப் பத்திரம்
ஓய்வூதியர்களுக்கான புகையிரத ஆணைச்சீட்டு வழங்குதல்
சேவை வழங்குதலுக்கான நடைமுறை
ஓய்வூதியர் மற்றும் அவருக்கான ஆணைச்சீட்டு உரிமையை உறுதிப்படுத்தல்
பொது 276 படிவத்தை கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ளுதல்
நிர்வாக அதிகாரியிடம் அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்
புகையிரத ஆணைச்சீட்டை தயாரித்தல்
நிர்வாக அதிகாரியிடம் கையொப்பமிடல்
விண்ணப்பப்படிவத்தை கோவையில் இடல்
இரண்டாவது பிரதியில் கையொப்பத்தை பெற்றுக்கொண்டு முதலாவது பிரதி ஆணைச்சீட்டை வழங்குதல்
கலால் அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்
சேவை வழங்குதலுக்கான நடைமுறை
உரிமையாளரின்விண்ணப்ப கடிதத்தை பெற்றுக்கொள்ளல்
வரி சான்றிதழைபெற்றுக்கொள்ளல்
உள்நாட்டு வருவாய் ஆணையாளரின் விடுவிப்பு கடிதத்தை பெற்றுக்கொள்ளுதல்
உதவி கலால் ஆணையாளரின் விடுவிப்பு கடிதத்தை பெற்றுக்கொள்ளுதல்
கலால் பணிப்பாளர் நாயகத்தின் விடுவிப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளுதல்
பொருட்களை அடகு வைத்தலுக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்
சேவை வழங்குதலுக்கான நடைமுறை
விண்ணப்பத்தை பரிசீலனை செய்தல்
அனுமதிக்காக முன்வைத்தல்
அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை அறவிடுதல்
அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்
சேவை பெறுனரின் பொறுப்புக்கள்
விண்ணப்பக்கடிதத்தை முன்வைத்தல்
கிராம உத்தியோகத்தரின் அறிக்கையை முன்வைத்தல்
பொலிஸ் அறிக்கையை முன்வைத்தல்
காப்பீட்டு சான்றிதழை முன்வைத்தல்
சத்திய பிரமாண பத்திரத்தை முன்வைத்தல்
பலா, ஈரப்பலா மற்றும் பனை மரங்களை வெட்டுவதற்கான அனுமதி
சேவை வழங்குதலுக்கான நடைமுறை
விண்ணப்ப கடிதத்தை பெற்றுக்கொண்டு நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வருதல்
பதிவுகளை மேற்கொண்ட பின் உரிய விண்ணப்பப்படிவத்தை வழங்குதல்
கிராம உத்தியோகத்தரினால் சான்று படுத்திய ஒப்பனை/திட்டத்தை பரிசீலனை செய்தல்
விண்ணப்பத்தில் தவறுகள் உள்ளனவா என பரிசீலித்த பின் உரிய இடத்திற்கு சென்று பார்வையிடல்( பரிந்துரை செய்வதற்காக)
விண்ணப்பப்படிவத்தை அனுமதிக்காக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வருதல்
அனுமதியை பெற்றுக்கொண்டதன் பின்னர் அனுமதிப்பத்திரத்தை தயாரித்து உயர் நிலை அதிகாரியிடம் கையொப்பமிடல்
அனுமதிப்பத்திரத்தை கிராம உத்தியோகத்தரிடம் வழங்கி கையொப்பம் பெற்றுக்கொண்ட பின் சேவை பெறுனருக்கு வழங்குதல்
சேவை பெறுனரின் பொறுப்புக்கள்
விண்ணப்பக்கடிதத்தை முன்வைத்தல்
வெட்டுவதற்காக தெரிந்துகொள்ளப்பட்ட மரம் உள்ள இடத்தின் சான்றுபடுத்திய ஒப்பனையை முன்வைத்தல்
வீடு கட்டுவதற்காக மரம் வெட்டப்படுமாயின் வீட்டின் திட்டத்தினை முன்வைத்தல்
வைத்திய நோக்கத்திற்காக மரம் வெட்டப்படுமாயின் மருத்துவ சான்றிதழை முன்வைத்தல்
சேவை வழங்குதலுக்கான நடைமுறை
விண்ணப்ப கடிதத்தை பெற்றுக்கொண்டு நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வருதல்
பதிவுகளை மேற்கொண்ட பின் உரிய விண்ணப்பப்படிவத்தை வழங்குதல்
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை கிராம உத்தியோகத்தர் மற்றும் மிருக வைத்தியரின் பரிந்துரை மற்றும் பணம் செலுத்திய பற்றுச்சீட்டுடன் காரியாலயத்திற்கு வழங்குதல்
விண்ணப்பத்தில் தவறுகள் உள்ளனவா என பரிசீலித்த பின் விண்ணப்பப்படிவத்தை அனுமதிக்காக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வருதல்
அனுமதிப்பத்திரத்தை கையொப்பமிடலுக்கு வழங்குதல்
அலுவலக பிரதியில் கையொப்பம் பெற்றுக்கொண்ட பின் அனுமதிப்பத்திரத்தை சேவை பெறுனருக்கு வழங்குதல்
சேவை பெறுனரின் பொறுப்புக்கள்
விண்ணப்பக்கடிதத்தை முன்வைத்தல்
உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சான்றுதழை முன்வைத்தல்
பிரதேச மிருக வைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்ட சான்றிதழை முன்வைத்தல்
சேவை வழங்குதலுக்கான நடைமுறை
விண்ணப்ப கடிதத்தை பெற்றுக்கொண்டு நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வருதல்
பதிவுகளை மேற்கொண்ட பின் உரிய விண்ணப்பப்படிவத்தை வழங்குதல்
கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ளல்
அனுமதியை பெற்றுக்கொண்ட பின் வன அதிகாரியின் பரிந்துரையை பெற்றுக்கொள்வதற்காக பதிவி தபாலில் அனுப்புதல்
கள பரிசோதனை செய்வதற்காக பிரதேச செயலாளரின் கவணத்திற்கு கொண்டு வந்து ஆலோசனை பெறுதல்
பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொண்ட பின் அவருடன் களத்திற்கு சென்று பார்வையிட்டு அனுமதியை பெறல் ( அனுமதிக்கலாம்/அனுமதிக்காமல் விடலாம்), அனுமதிக்கப்பட்டால் ஒரு அனுமதிப்பத்திரத்திற்கு 168.00 ரூபாய் கட்டணமாக அறவிடப்பட வேண்டும்.
நன்றாக பரிசீலனை செய்யப்பட்ட அனுமதிப்பத்திரத்தை கையொப்பத்திற்காக பிரதேச செயலாளர் அல்லது உதவி பிரதேச செயலாளருக்கு முன்வைத்தல்
அனுமதிப்பத்திரத்தில் சேவை பெறுனரின் கையொப்பத்தை பெறுதல்
அனுமதிப்பத்திரத்தின் இரண்டு அசல் பிரதிகளை மர முத்திரையோடு கிராம உத்தியோகத்தரிடம் வழங்குதல்
சேவை பெறுனரின் பொறுப்புக்கள்
விண்ணப்பக்கடிதத்தை முன்வைத்தல்
ஒப்பனையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை முன்வைத்தல்
சேவை பெறுனர் நிலத்தின் சொந்தக்காரர் இல்லாத சந்தர்ப்பத்தில் மரம் விற்கப்பட்டதற்கான பற்றுச்சீட்டு ஒன்றை 10 ரூபாய் முத்திரையில் கையொப்பமிட்டு வழங்குதல் வேண்டும்
நிலம் பலருக்கு சொந்தமாக இருப்பின் அனைத்து உரிமையாளர்களின் இணக்க கடிதங்கள் கிராம உத்தியோகத்தரினால் சான்று படுத்தி வழங்க்பட வேண்டும்
மணல் அகழ்தல் மற்றும் கொண்டு செல்லல் (வணிக நோக்கமற்ற)
சேவை வழங்குதலுக்கான நடைமுறை
விண்ணப்பக்கடிதத்தை முன்வைத்தல்
கள பரியோதனைக்கு வழங்குதல்
விண்ணப்பப்படிவத்தை அனுமதிக்காக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வருதல்
சரியான கட்டணங்களை அறவிட்ட பின் அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்
சேவை பெறுனரின் பொறுப்புக்கள்
விண்ணப்பக்கடிதத்தை முன்வைத்தல்
கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையை முன்வைத்தல்
சுற்றாடல் அறிக்கையை முன்வைத்தல்
வெடிபொருட்கள் அனுமதிப்பத்திரத்திற்கான பரிந்துரை வழங்குதல்
சேவை வழங்குதலுக்கான நடைமுறை
விண்ணப்பத்தை பெறல்
உரிய உத்தியோகத்தர்களிடம் பரிந்துரைக்காக வழங்குதல்
பிரதேச செயலாளரின் பரிந்துரையை உரிய நிறுவனங்களுக்கு வழங்குதல்
சேவை பெறுனரின் பொறுப்புக்கள்
கிராம உத்திஈயாகத்தரினால் பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்ப கடிதத்தை வழங்குதல்
தொழில்நுட்ப உத்தியோகத்தரின் அறிக்கையை முன்வைத்தல்
சூழல் அறிக்கையை முன்வைத்தல்















